கொரோனா காரணமாக பிரதமர் அறிவித்துள்ள 21 நாள் ஊரடங்கு வருகிற 14-ந்தேதியுடன் முடிகிறது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் ஊரடங்கு குறித்து பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்-அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து விட்டு நாளை முடிவை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கொரோனா நோயை கட்டுப்படுத்துவது தொடர்பாக 12 மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது. இவர்கள் ஊரடங்கை தளர்த்தலாமா? என்பது குறித்து பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு பிரதமரிடம் அறிக்கை அளிக்க உள்ளனர். இந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பிரதமர் நாளை முடிவுகளை எடுத்து ஊரடங்கு தொடர்பாக அறிவிக்க உள்ளார்