சென்னை:ஆதி திராவிடர் நல பள்ளிகளில், தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, தகுதியானவர் பட்டியலை சேகரிக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில், ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டில் செயல்படும் பள்ளிகளில், தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களை, பதவி உயர்வு வழியாக நிரப்ப, அரசு உத்தரவிட்டு உள்ளது.

இதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, ஆதிதிராவிடர் நல பள்ளிகளை கவனிக்கும் அதிகாரிகளுக்கு, ஆதி திராவிடர் நலத்துறை கமிஷனர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை: ஆதி திராவிட தொடக்க பள்ளிகளில், 2019 - 2020ம் கல்வி ஆண்டுக்கான, தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு, உரிய விதிகளை பின்பற்றி, தகுதியானவர்களின் பட்டியலை, விரைந்து தயாரித்து, கமிஷனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.