கொரோனா பாதிப்புகளால் பொருளாதாரத்தில் சிக்கியுள்ள தனி நபர்கள் மற்றும் தொழில், வணிக நிறுவனங்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி தனி நபர்களுக்கான ஐந்து லட்ச ரூபாய்க்குட்பட்ட வருமான வரி நிலுவைத் தொகைகள் உடனடியாக அவரவர் வங்கிக்கணக்கில் சேர்க்கப்படும் என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 14 லட்சம் பேர் பயனடைவார்கள் எனவும் கூறியுள்ளது. மேலும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு சேர வேண்டிய ஜிஎஸ்டி, சுங்க வரி நிலுவைத் தொகைகளும் உடனடியாக விடுவிக்கப்படும் எனத் தெரிவிக் கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு லட்சம் தொழில், வணிக நிறுவனங்கள் பலன் பெறும் என கூறப்பட்டுள்ளது.


இவ்விரு தரப்பினருக்கும் மொத்தம் 18 ஆயிரம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட உள்ளதாக நிதியமைச்சகம் கூறியுள்ளது.