சென்னை:புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, ஆகஸ்ட், 1ல் துவக்கப்பட உள்ளது. தற்போதைய மாணவர்களுக்கு, ஜூலையில் செமஸ்டர் தேர்வு நடத்தவும், ஜூனில் கோடை விடுமுறை விடவும், பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி.,க்கு, நிபுணர் குழு பரிந்துரைத்து உள்ளது.

புதிய கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை, பழைய மாணவர்களுக்கு வகுப்புகளை துவங்கி, செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது உள்ளிட்டவை குறித்து, ஆய்வு செய்ய, பல்கலை கழக மானிய குழு, நிபுணர் குழுவை அமைத்தது.ஹரியானா மத்திய பல்கலை துணை வேந்தர், குகாத் தலைமையிலான நிபுணர் குழு, தன் அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. 

ஜூனில் விடுமுறை

ஜூன் 1 முதல், 30 வரை, கோடை விடுமுறை விட வேண்டும்; ஜூலை, 1ல், தேர்வுகளை துவக்கி, 31க்குள் முடிக்க வேண்டும் l தேர்வுகளை பொறுத்தவரை, வழக்கமான வினாத்தாளை விட, 50 சதவீதம் வரை கேள்விகளை குறைத்து கொள்ளலாம். புத்தகத்தை பார்த்து எழுதும், 'ஓபன் புக்' தேர்வு, புராஜக்ட் தேர்வு உள்ளிட்ட அனைத்துக்கும் நேரத்தை குறைக்க வேண்டும்

* பிஎச்.டி., - எம்.பில்., போன்ற ஆராய்ச்சி படிப்புகளுக்கான, வாய்மொழி தேர்வை, கூகுள், ஸ்கைப், மைக்ரோசாப்ட் தொழில்நுட்பம் வழியாக, ஆன்லைனில் நடத்தி கொள்ளலாம்l இது போன்ற நெருக்கடி நிலையை சமாளிக்கு வகையில், எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும், இணையவழி பாடம் தயாரிக்க வேண்டும். குறைந்தபட்சம், 25 சதவீத பாடங்களை இணையவழியிலும், 75 சதவீதம் நேரடி வகுப்புகளிலும் நடத்த வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

அடுத்த ஆண்டு பட்டியல் தயார்

இந்த ஆண்டு தாமதமாக துவங்கப்படும் வகுப்புகளை, 2021 மே, 25 வரை நீட்டிக்கலாம். 2021 மே, 26 முதல், ஜூன், 25 வரை தேர்வு நடத்த வேண்டும். 2021 ஜூலை, 1 முதல், 30 வரை கோடை விடுமுறை விட வேண்டும். மீண்டும், ஆக.,2ல், 2021-22ம் கல்வி ஆண்டுக்கான புதிய வகுப்புகள் துவங்கும்.

கல்லுாரிகளில் சேர நுழைவு தேர்வு?

பல்கலை கழக மானிய குழுவுக்கு, நிபுணர் குழு அனுப்பிய அறிக்கையில், 'வரும் கல்வி ஆண்டுகளில், இளநிலை, முதுநிலை, கலை, அறிவியல் பட்டப் படிப்புகள் மற்றும் ஆராய்ச்சி படிப்புகளின் சேர்க்கைக்கு, தேசிய அளவில் அல்லது மாநில அளவில் நுழைவு தேர்வை நடத்தலாம்' என, பரிந்துரைத்துள்ளது. ஆனால், இந்த பரிந்துரை ஏற்கப்படுமா என, தெரியவில்லை. கொரோனா பிரச்னையால் எழுந்துள்ள சூழலை சமாளிக்கவே, உயர்கல்வி துறை தடுமாறிக் கொண்டிருக்கும் நேரத்தில், புதிய பிரச்னையை நிபுணர் குழு கிளப்பியுள்ளதாக, கல்வியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதில் கூறியிருப்பதாவது:l கல்லுாரிகளில், இளநிலை பட்டப் படிப்புகளுக்கு, ஆகஸ்ட், 1ல் புதிய மாணவர் சேர்க்கை துவங்கும். தாமதமான மாணவர்களுக்கு, செப்டம்பர், 30 வரை, மாணவர் சேர்க்கை நடத்தலாம். செப்., 1ல் புதிய மாணவர்களுக்கு வகுப்புகள் துவங்கப்படும். பழைய மாணவர்களுக்கு, ஆக.,1ல், புதிய கல்வி ஆண்டுக்கான வகுப்புகள் துவங்கப்படும்l மார்ச், 16 முதல் துவங்கிய, 'ஆன்லைன்' வகுப்புகள், மே, 15 வரை தொடரும். மே, 16 முதல், 31க்குள் செய்முறை மற்றும் அக மதிப்பீட்டு தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும்.தற்போது விடுப்பு அறிவித்த நாட்களை சமாளிக்க, வாரம் ஆறு நாட்கள் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.