தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மத்திய அரசு அறிவித்ததைப் பின்பற்றி தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை நிறுத்தி  வைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொரோனா தடுப்பு பணிகளுக்கு ஏராளமான நிதி செலவிடப்படுவதால் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வு நிறுத்திவைக்கப்பட்டது.  
இந்நிலையில், தமிழகத்தில்  அரசு ஊழியர்களுக்கு அடுத்த ஆண்டு ஜூலை மாதம் வரை அகவிலைப்படி உயர்வை நிறுத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. அகவிலைப்படி நிலுவைத் தொகை வழங்குவதும் அடுத்த ஆண்டு ஜூன் 30 வரை நிறுத்திவைக்கப்படுகிறது.
முன்னதாக அரசு ஊழியர்களிளின் ஈட்டிய விடுப்பு சம்பளத்தை ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.