சென்னை : பிளஸ் 1, பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, தள்ளி வைக்கப்பட்டுள்ளது.தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 தேர்வுகள் ஏற்கனவே முடிந்து விட்டன. 


பிளஸ் 1 மாணவர்களுக்கு, ஒவ்வொரு பிரிவிலும், ஒரு பாடத்துக்கு மட்டுமே தேர்வு நடைபெற வேண்டியுள்ளது. நடந்து முடிந்த தேர்வுகளுக்கான விடைத்தாள் திருத்தம், மார்ச், 31ல் துவங்குவதாக இருந்தது. தமிழக அரசு ஏற்கனவே அறிவித்த, 144 தடை உத்தரவால், விடைத்தாள் திருத்தும் பணி, ஏப்ரல், 7க்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏப்.,15 வரை, நாடு தழுவிய ஊரடங்கை மத்திய அரசு அறிவித்தது. எனவே, ஏப்ரல், 7ல் துவங்க இருந்த, விடைத்தாள் திருத்தம், மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, தேர்வு துறை இயக்குனர், உஷாராணி நேற்று சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், 'விடைத்தாள் திருத்தம் துவங்கும் தேதி, பின்னர் அறிவிக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது.