PMCARESfund,நன்கொடை,பிரதமர்,நிவாரணநிதி

சென்னை : கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமர் நிவாரண நிதிக்கு, பொதுத்துறையை சேர்ந்த வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள், 399.63 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளன. 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, தங்களால் இயன்ற நிதியை, நிவாரணமாக வழங்க, நாட்டு மக்களுக்கு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். இதைத் தொடர்ந்து, தனி நபர், தனியார் பெரு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள் என, நிதி வழங்கி வருகின்றன. பொதுத் துறையை சேர்ந்த வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மட்டும், இதுவரை மொத்தம், 399.63 கோடி ரூபாயை வழங்கி உள்ளன. 

இதில், அதிகபட்சமாக, பாரத ஸ்டேட் வங்கி, 100 கோடி; ஆயுள் காப்பீட்டு நிறுவனம், 105 கோடி; ஐ.ஐ.எப்.சி.எல்., என்ற, இந்திய உள்கட்டமைப்பு நிதி நிறுவனம், 25 கோடி; ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனம், 22.81 கோடி; பாங்க் ஆப் பரோடா, 20 கோடி; பஞ்சாப் நேஷனல் வங்கி, 15 கோடி ரூபாய் வழங்கி உள்ளன.மத்திய நிதித்துறை ஊழியர்கள் உட்பட, அந்த துறை வாயிலாக மொத்தம், 430 கோடி ரூபாய், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டுள்ளது.