சென்னை:'அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை விடுத்துள்ளது.


இதுகுறித்து, அதன் பொதுச்செயலர் மயில், முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையில், அரசின் உத்தரவுகளுக்கு ஏற்ப, பல்வேறு துறைகளை சேர்ந்த, அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். ஆசிரியர்களில் சிலர், தன்னார்வலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகளை, அரசு ரத்து செய்ய வேண்டும். 2019ல், 'ஜாக்டோ - ஜியோ' சார்பில் நடத்தப்பட்ட போராட்டங்களில் பங்கேற்றவர்கள், பல்வேறு ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கு ஆளாகியுள்ளனர். அவர்கள் மீதான, நடவடிக்கைகளை, அரசு கைவிட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.