சென்னை:அரசு நிதியுதவி பெற, எழுத்தாளர்கள், ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழக அரசு சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் கலை இலக்கிய மேம்பாட்டு சங்க நிதி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த நிதியிலிருந்து, 2018- - 19ம் ஆண்டிற்கான, சிறந்த ஆதிதிராவிடர், மதம் மாறிய கிறிஸ்தவர், பழங்குடியினர் பிரிவை சேர்ந்த, 10 பேர்.ஆதிதிராவிடர் குறித்து எழுதும், ஆதிதிராவிடர் அல்லாத ஒருவர் என, 11 சிறந்த எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கப்படும். இதற்கான நுாலை வெளியிட, 40 ஆயிரம் ரூபாய் வரை, நிதியுதவி அளிக்கப்படும். பரிசு பெற விண்ணப்பிப்பதற்கான, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த விபரங்களை, தமிழக அரசின், tn.gov.in என்ற, இணையதளத்தில் அறிந்து கொள்ள லாம். மேலும், அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திலும், விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.முறையான விண்ணப்பத்துடன், படைப்புகளை எழுத்து வடிவில், இரண்டு பிரதிகள் இணைத்தும், விண்ணப்பதாரரின் மொபைல் போன் எண் ஆகியவற்றை குறிப்பிட்டும், ஜூன், 15க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.