Iphone Hand Left

இப்போது, எல்லோருடைய தாரக மந்திரமும், 'விலகி இரு' என்பதாக இருக்கிறது. இதுபோன்ற சூழ்நிலையில், 'ஸ்டே டச்' (Stay Touch) என்ற ஒரு செயலி மூலம், ஒருவருடன் தொடர்பில் இருப்பது சுலபமாகிறது. 

வியாபார அல்லது மரியாதை நிமித்தமாகவோ, ஒருவரை ஒருவர் பார்க்கும்போது கைகுலுக்குவது, விசிட்டிங் கார்டு கொடுப்பது போன்றவை சகஜம். ஆனால், 'கொரோனா' காலத்துக்கு பின், இதெல்லாம் தொடர்ந்து பரவலாக இருக்குமா என்பது சந்தேகமே. ஒருவரிடமிருந்து விசிட்டிங் கார்டு வாங்கியவுடன், உடனடியாக மொபைல் போனில் பதிவு செய்ய நினைப்பீர்கள். அந்த கஷ்டம் இப்போது இல்லை.

உங்களிடம், 'ஸ்டே டச்' செயலி இருக்குமானால் நீங்கள் சந்திக்கும் நபரிடமும் அதே செயலி இருக்குமானால், மொபைல் போன் வழியாகவே விசிட்டிங் கார்ட் விபரங்களை, மொபைல் போனுக்கு அனுப்பி விடலாம்.ஒருவருடைய விசிட்டிங் கார்ட் விபரங்களை பதியும்போது, அவர் யார் என்பதை ஞாபகம் வைத்து கொள்வதற்காக, அவரைப் பற்றிய விபரங்களையும் எழுதுவதற்கான இடமும், இந்த செயலியில், இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த 'ஸ்டார்ட் அப்' கம்பெனியின் இணையதளம் www.staytouch.com பெண்களுக்காகவே ஒரு 'ஸ்டார்ட்அப்'இப்போது இல்லாவிட்டாலும், 'கொரோனா' காலத்துக்கு முன், உலகளவில் அதிகமாக விற்பனையானது, பெண்களின் தேவைகளுக்கான பொருட்கள் ஆகும். அதாவது மேக்கப், சரும பாதுகாப்பு, தலைமுடி பாதுகாப்பு, இயற்கை அழகு சாதனம், குழந்தைக்கு தேவையான பொருட்கள், வாசனை திரவியம் என்பதெல்லாம் இதில் அடங்கும்.

இதுபோன்ற பெண் களுக்கு தேவையான எல்லா பொருட்களும் ஒரே இடத்தில், கிடைத்தால் எப்படி இருக்கும். அதுவும் தள்ளுபடியுடன், வீட்டுக்கே நேரடியாக வரும்போது இன்னும் வசதியாக இருக்கும். அவ்வகையில், ஏறத்தாழ ஆயிரக்கணக்கான பொருட்களை தன்னகத்தே கொண்டு விளங்குகிறது, நைகா.காம் (nykaa.com). இவ்வளவு அழகு சாதன பொருட்கள் ஓரிடத்தில் கிடைப்பது இந்த இணையத்தில்தான் என கூறலாம்.சந்தேகங்களுக்கு: sethu raman.sathappan@gmail.com, www.startup buisness news.com. மொபைல் போன்: 98204 -51259.
--சேதுராமன் சாத்தப்பன் --