சி.பி.எஸ்.இ. 10-மற்றும் 12-ம் வகுப்பு ...

சென்னை:சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு, அடுத்த கல்வி ஆண்டுக்கான அங்கீகாரம் தொடர்பாக விண்ணப்பிக்க, ஜூன், 30 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கல்வி ஆண்டிலும், இப்பள்ளிகள், புதிய மாணவர்களை சேர்ப்பது, தேர்வு நடத்துவது தொடர்பாக, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யில் அங்கீகாரம் பெற வேண்டும். இதன்படி, 2021 - 2022ம் கல்வியாண்டுக்கு, மாணவர்களை சேர்ப்பது தொடர்பாக, அங்கீகாரம் பெற, பள்ளிகளிடம், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பம் பெறும் பணி நடந்து வருகிறது.இதற்கான அவகாசம், வரும், 30ம் தேதி முடிவதாக இருந்தது. தற்போது, ஜூன், 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.