Holland & Barrett Vitamin C & Zinc Lozenges Orange | Holland ...

மதுரை:தமிழகத்தில் கொரோனாவிற்கு எதிரான போரில் டாக்டர், நர்ஸ், சுகாதார பணியாளர்கள், போலீசார் வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பிக்க, ஜிங்க், 'வைட்டமின் சி' அல்லது மல்டி வைட்டமின் மாத்திரைகளை உட்கொள்ள அரசு பரிந்துரைத்துள்ளது.

ஊரடங்கில் இருக்கும் மக்கள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட உணவுகளை சாப்பிட்டு தங்களை நோய் எதிர்ப்பு சக்தி மிக்கவர்களாக மாற்ற முடியும். இதற்கு எந்த உணவை சாப்பிட வேண்டும் என சென்னை பொது மருத்துவ நிபுணர் டாக்டர் ஆப்ரின் தரும் 'டிப்ஸ்': வைட்டமின் சி ,சிட்ரஸ் பழங்களில் நிரம்பி உள்ளது. ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, எலுமிச்சை, கொய்யா, கிவி பழங்களை உணவாக்கலாம்.காய்கறி என்றால், தக்காளி, காலிபிளவரில் கிடைக்கும்.

* மல்டி வைட்டமின் பெற அனைத்து வகை காய்கறிகளையும் சரிவிகித அளவில் சாப்பிடலாம். சீரான இடைவெளியில் கீரை சாப்பிடுவது பலனளிக்கும். 'சீஷனல்' காய்கறிகளை தாராளமாக சாப்பிடலாம்.
* ஜிங்க் சத்து மாமிசம், கடல் உணவுகளில் அதிகம் உள்ளது. குறிப்பாக, நண்டு, மீன், முட்டை சாப்பிடுவது நல்லது. பரங்கிக்காய், பூசணியிலும் கிடைக்கிறது. பால், தயிர், வெண்ணெய் உள்ளிட்ட பால் பொருட்களிலும் பெற முடியும். பாதம், நிலக்கடலை, பிஸ்தா போன்ற கொட்டை வகையிலும் அதிகம் உண்டு.

* இச்சத்துகள் சரிவிகித அளவில் கிடைக்குமாறு உணவு பட்டியலை தயார் செய்து சாப்பிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகமானால் கொரோனாவால் நம் உடலுக்குள் நுழைய முடியாது. நுழைந்தாலும் பெரிய அளவில் வாலாட்ட முடியாது, என்றார்.