சென்னை:'புதிய கல்வி ஆண்டு குறித்து, நிபுணர் குழு அறிக்கை வந்த பின் முடிவு செய்யப்படும்' என, பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக, யு.ஜி.சி., வெளியிட்ட அறிவிப்பு:கொரோனா வைரஸ் பிரச்னையால், கல்வி நிறுவனங்கள் செயல்படவில்லை. புதிய கல்வி ஆண்டு மற்றும் செமஸ்டர் தேர்வுகளை நடத்துவது குறித்து ஆய்வு செய்ய, நிபுணர் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவின் அறிக்கை அடிப்படையில், புதிய கல்வி ஆண்டு குறித்து முடிவு செய்யப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.