பிஎஃப் வட்டி 8.55% ஆக குறைப்பு ...

சென்னை:பொது வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம், 7.1 சதவீதமாக குறைக்கப்பட்டு உள்ளது.அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்படும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஜனவரி, 1 முதல், மார்ச், 31 வரை, 7.9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டது.

ஏப்.,1 முதல், ஜூன், 30 வரை, வட்டி விகிதத்தை, 7.1 சதவீதமாக நிர்ணயம் செய்து, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.அதை பின்பற்றி, தமிழக அரசும், பொது வருங்கால வைப்பு நிதிக்கு, ஏப்., 1 முதல், ஜூன், 30 வரை, 7.1 சதவீதம் வட்டி நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.