டிச. 4 முதல் காலவரையற்ற போராட்டம் ...
சென்னை:'அகவிலைப்படி, பி.எப்., வட்டி குறைப்பு தொடர்பான அரசாணைகளை, தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்' என, அரசு ஊழியர், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ- - ஜியோ' வலியுறுத்தி உள்ளது.

அதன் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அறிக்கை:இந்த இக்கட்டான சூழலில், போராடி பெற்ற உரிமையான, சரண் விடுப்பை, ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கும் அரசாணையை, தமிழக அரசு வெளியிட்டுள்ளது; இது, சர்வாதிகார போக்காகும்.இது போதாதென்று, வருங்கால வைப்பு நிதியான, பி.எப்.,புக்கு வழங்கப்படும் வட்டியை, 7.9 சதவீதத்தில் இருந்து, 7.1 சதவீதமாக குறைத்து உள்ளது.

மத்திய அரசை பின்பற்றி, தமிழக அரசும், 2020 ஜனவரி முதல், 2021 ஜூலை வரை, அகவிலைப்படியை நிறுத்திஉள்ளது.இந்த நடவடிக்கைகளை கண்டிக்கிறோம். இதற்கான அரசாணைகளை, உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.

https://www.dinamalar.com/news_detail.asp?id=2529265