குப்பேபாளையம் அரசு பள்ளியில் கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது
          குப்பேபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ,மாணவியரின் குடும்பங்களுக்கு ரூபாய் 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கொரோனா நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
         தொண்டாமுத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட குப்பேபாளையம் அரசு பள்ளியில் படிக்கும் மாணவ மாணவியரின் குடும்பங்களுக்கு இன்று 25 4 2020 காலை 9 மணிக்கு ரூபாய் 15 ஆயிரம் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருள்கள் கொரோனா பாதுகாப்பு முகக்கவசம்,டெட்டால் சோப்பு, அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமைமாவு,சர்க்கரை, உள்ளிட்ட 15 வகையான மளிகை பொருட்கள், தேங்காய் உள்ளிட்ட காய் கறிகளை பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி பி.சாரதா அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது.
           இந்நிகழ்ச்சியில் திருமதி.தமிழ்ச்செல்வி,       சமூக ஆர்வலர்கள் ஜீ.ரவிக்குமார், ஆர்.சாந்திரவிக்குமார் குருகுலம் என்.முருகன் தொண்டாமுத்தூர் இந்திய விடுதலைப்போராட்ட வீரர்கள் நினைவு நற்பணி மன்றத்தலைவர் டாக்டர் எம்.சிவக்குமார்(எ)ஜீவா எஸ்.ஷைனிசிவக்குமார் எஸ்.வருண், டி.கவிதா குப்பேபாளையம் நண்பர்கள் நற்பணி மன்ற நிர்வாகிகள் கே.எஸ்.கார்த்திக், ஆர்.இளவரசு,என்.நவீன்மாஸ்திராஜ்,மனோஜ்குமரார்,ராஜன்,ஆனந்தன் ஆகியோர் கலந்துகொண்டு கொரோனா நிவாரண பொருட்களை வழங்கினர்.