கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அரசு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் பல்வேறு பாடங்களுக்கான தேர்வுகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், ” ஊரடங்கு முடிந்து நிலைமை சரியான பின்னர் 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்றும், மாணவர்களுக்கு போதிய அவகாசம் அளிக்கும் வகையில், தேர்வு நடப்பதற்கு 10 நாட்களுக்கு முன்பு தேர்வு அட்டவணை வெளியிடப்படும். 1-4-2020 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் குறிப்பிட்டதைப் போலவே, 10ம் வகுப்புக்கான விடுபட்ட பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும் ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.