அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு Work From Home அளிக்க வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவங்களையும், அங்கன் வாடிகள் அனைத்தும் வரும் 31 ஆம் தேதிவரை மூட உத்தரவிட்டுள்ளது.
இதில் மருத்துவம் மற்றும் மருத்துவம் சார்ந்த கல்லூரியில் தொடர்ந்து இயங்கும் எனவும் திட்டமிட்டபடி 10 ஆம் , மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுதேர்வுகள் நடக்கும் எனவும் அத்தியாவசிய பணிகள் தொடரும் என தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கூட்டங்கள், விளையாட்டுகள், தேவாலயம், மசூதிகள், கோவில்களில் , மாநாடுகள், சுற்றுலா ரிசார்டுகள், ஒன்றுகூடும் இடங்கள், நீச்சம் குளம், கண்காட்சிகள், கலாச்சார நிகழ்வுகள், கருத்தரங்குகள், , ஏற்கனவே திட்டமிட்ட திருமண நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்தக்கூடாது.

உடற்பயிற்சி கூடங்கள் , அரசியல் கூட்டங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்க்க வேண்டுமென தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து டாஸ்மாக், தனியார் பார்கள் மற்றும் கேளிக்கை விடுதிகள் வரும் 31 ஆம் தேதிவரை மூடப்பட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் தமிழக அரசுன் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பாராட்டிய திமுக தலைவர் ஸ்டாலின், அரசு, தனியார் ஊழியர்கள் அனைவருக்கும் Work from home அளிக்க நடவடிக்கை தேவை என கோரிக்கை வைத்துள்ளார்.