பள்ளிக் கல்வி- சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை-புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் சத்துணவுத் திட்டம் – அரசு/அரசு நிதியுதவி பள்ளிகளில் செயல்படும் சத்துணவு மையங்கள் – பயனாளிகளுக்கு மதிய சத்துணவு உட்கொள்வதற்கு அறைவசதி ஏற்படுத்த தொடர்பான விவரங்கள் கோருதல் சார்பு.


புரட்சித் தலைவர் எம் . ஜி . ஆர் சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் மாணவ / மாணவிகள் சுகாதார மூறையில் மதிய உணவு உட்கொள்ளும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் காலியாக / பயன்படுத்தப்படாமல் உள்ள வகுப்பறைகளை மாற்றி சீரமைத்து உணவு அருந்தும் கூடங்கள் அமைப்பது தொடர்பாக 04.03.2020 அன்று சமூக நல ஆணையர் அவர்களின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது .

அச்சமயம் ஒன்யறித்திற்கு ஒரு பள்ளி வீதம் உயர்நிலைப் பள்ளி / மேல்நிலைப் பள்ளி வீதம் தேர்வுத் செய்யும்போது அப்பள்ளிளில் கல்வி பயன்பாட்டிற்காக பயன்படாத வகுப்பறையினை மாற்றி சீரமைத்து மாணவர்களின் உணவருந்தும் கூடங்களாக அமைத்துத்தர ஏதுவாக உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல் மற்றும் முழு முகவரியுடனும் இத்துடன் இணைக்கப்பட்ட படிவத்தில் இவ்வியக்ககத்திற்கு இச்செயல்முறைகளை கண்ட அன்றே இவ்வியக்ககத்தின் idssedanic.in இமெயில் மூலமாக அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார் .