சென்னை : பள்ளிகளுக்கு, வரும், 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 'ஆசிரியர்கள் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும்' என, பள்ளி கல்வி கமிஷனர் தெளிவுபடுத்தி உள்ளார்.சுற்றறிக்கைஇதுகுறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளி கல்வி கமிஷனர், சிஜி தாமஸ் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, தமிழகத்தில் உள்ள, அனைத்து அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, வரும், 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது

. பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் திட்டமிட்டபடி நடக்கும். தேர்வு முடியும் வரை, தேர்வு எழுதும் மாணவர்களுக்காக மட்டும், விடுதிகள் மற்றும் உறைவிட பள்ளிகள் தொடர்ந்து இயங்கும். கால அட்டவணைவிடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்கள், தங்கள் கைகளை உரிய கிருமி நாசினி அல்லது சோப்பால் துாய்மைப்படுத்த வேண்டும் என, விடுதி பொறுப்பாளர்களும், ஆசிரியர்களும் அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், நடப்பு கல்வி ஆண்டுக்குரிய தேர்வு பணிகள், வரும் கல்வி ஆண்டுக்கான கற்பித்தல் கையேடுகள் தயாரிப்பு, ஆண்டு திட்ட தயாரிப்பு, கால அட்டவணை தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட வேண்டும். மேலும், 'டிக் ஷா' செயலி வழியாக, க்யூ.ஆர்.கோடு வழியாக, பாட விபரங்களை சேகரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆங்கில பேச்சு பயிற்சிக்கான மாதிரிகளை உருவாக்குதல், புதிய மாணவர்கள் சேர்க்கைக்கான ஆயத்த பணிகள் போன்றவற்றையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.