சென்னை : பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வில், நாளை ஆங்கில மொழி பாடத்துக்கு, தேர்வு நடத்தப்படுகிறது. 

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச், 2ல் துவங்கியது. தமிழகம், புதுச்சேரியில், 3,012 மையங்களில், 8.35 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர்.முதல் நாளில், மொழி பாடமான, தமிழ், சமஸ்கிருதம், ஹிந்தி, உருது, தெலுங்கு உள்ளிட்ட தேர்வுகள் நடந்தன.தேர்வுக்கு தயாராவதற்கு, நேற்றும், இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது. நாளை ஆங்கில மொழி பாடத்துக்கு தேர்வு நடத்தப்படுகிறது.