அதிக உப்பு...ரொம்ப தப்பு! : இன்று உலக கிட்னி தினம்

சிறுநீரகத்தின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உலக கிட்னி தினம் மார்ச் 12ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. 

சிறுநீரக பாதிப்புக்கு என்ன காரணம், வராமல் தடுப்பது எப்படி, வாழ்க்கை முறையில் என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இத் தினத்தின் முக்கிய நோக்கம். 'வருமுன் தடுத்தல் மற்றும் சமமாக கவனித்தல் மூலம் ஆரோக்கியமான சிறுநீரகம் அனைவருக்கும்' என்பது இந்தாண்டு மையக் கருத்து.

உடல் உறுப்புகளில் மூளை, இருதயம் போன்று முக்கியமானது 'கிட்னி' எனப்படும் சிறுநீரகம். இது நம் வயிற்றின் பின்பக்கம் கீழ் முதுகுப் பகுதியில், முதுகுத்தண்டின் இருபுறமும் அவரை விதை வடிவத்தில் அமைந்துள்ளன. உடலில் ரத்தத்தை சுத்திகரித்து கழிவுகளை வெளியேற்றும் பணியை செய்கிறது. புகை பிடித்தல், மதுப்பழக்கம், உடற்பயிற்சியின்மை, உடல் எடை, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், உணவுப்பழக்கம், காசநோய், புற்றுநோய், பரம்பரை உள்பட பல காரணங்களால் சிறுநீரகம் பாதிக்கப்படுகிறது. சிறுநீரக பாதிப்பில் முக்கியமானது கல் உருவாகுதல். சிறுநீரில் உள்ள உப்புகள் ஒன்று திரண்டு கற்களாக உருவாகின்றன.

உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்.உப்பு நிறைந்த உணவுகளை குறைத்தல்.நீரிழிவு நோய் வராமல் தடுத்தல்.சிறுநீரை அடக்கி வைக்கக்கூடாது. தினசரி உடற்பயிற்சி மிக அவசியம். புகை, மது பழக்கத்தை கைவிடுங்கள். குறைந்தது 2 - 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். 

5உலகின் வேகமான உயிரிழப்புகளில் 2040ம் ஆண்டுக்குள் சிறுநீரக நோய் ஐந்தாவது இடத்தில் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

17உலகில் ஆண்டுதோறும் 17 லட்சம் பேர் சிறுநீரக பாதிப்பால் உயிர் இழக்கின்றனர்.

85உலகில் 85 கோடி பேர் சிறுநீரக நோயால் திக்கப்பட்டுள்ளனர். உலகில் பத்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு உள்ளது.