சென்னை : தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வுக்கு, விடைக்குறிப்பு இன்று வெளியிடப்படுகிறது.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, டிச., 15ல் நடந்தது.இந்த தேர்வுக்கான உத்தேச விடைக்குறிப்பு, அரசு தேர்வுகள் இயக்குனரகத்தின், www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், இன்று வெளியிடப்படுகிறது. 

இந்த விடைக்குறிப்பு தொடர்பாக ஆட்சேபனை இருந்தால், வரும், 10ம் தேதிக்குள், ntsexam2019@gmail.com என்ற, 'இ - மெயில்' முகவரிக்கு, மாணவர்கள் மற்றும் பெற்றோர் உரிய ஆதாரத்துடன் கடிதம் அனுப்பலாம் என, அரசு தேர்வுகள் இயக்குனரகம் அறிவித்துள்ளது.