சென்னை : ஜே.இ.இ., எனப்படும், ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம், இன்றுடன் முடிகிறது. 

மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும், தேசிய தேர்வு முகமை சார்பில், ஜே.இ.இ., என்ற ஒருங்கிணைந்த நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எஸ்சி., - என்.ஐ.டி., ஆகிய நிறுவனங்களில் சேர, ஜே.இ.இ., நுழைவு தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்து, தேர்ச்சி பெற வேண்டும்.இந்த கல்வி ஆண்டுக்கான இரண்டாம் கட்ட, ஜே.இ.இ., தேர்வு, ஏப்ரலில் நடக்கிறது. இதில், பங்கேற்க விரும்பும் மாணவர்களுக்கு, பிப்.,7ல் ஆன்லைன் விண்ணப்பப் பதிவு துவங்கியது. 

இன்றுடன் விண்ணப்பப் பதிவு முடிகிறது. இன்று மாலை, 5:00 மணிக்குள், மாணவர்கள் விண்ணப்பப் பதிவை முடித்து கொள்ளுமாறு, தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தியுள்ளது.