தனியார் பள்ளிகளுக்கு தமிழக அரசு ...

தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை
சென்னை 'அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணம் கேட்டு, பெற்றோருக்கு நெருக்கடி தரக் கூடாது' என, தனியார் பள்ளிகளுக்கு, கல்வித் துறை அதிகாரிகள் எச்சரிக்கை செய்துள்ளனர். கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையால், நாட்டின் இயல்பு வாழ்க்கை முடங்கிஉள்ளது. இந்நிலையில், தனியார் பள்ளிகள் தரப்பில், வரும் கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, ஏப்ரலுக்குள் செலுத்துமாறு, பெற்றோருக்கு குறுஞ்செய்தி அனுப்பி, நெருக்கடி கொடுப்பதாக புகார் எழுந்துள்ளது. 

இது குறித்து, நம் நாளிதழில், நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து, தனியார் பள்ளிகளுக்கான, அரசு துறை இயக்குனர், கருப்பசாமி அறிவுறுத்தல்படி, முதன்மை கல்வி அதிகாரிகளால், தனியார் பள்ளிகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 'எந்த பள்ளியும், அடுத்த கல்வி ஆண்டுக்கான கட்டணத்தை, ஏப்ரலில் செலுத்துமாறு, நெருக்கடி தரக் கூடாது. மீறினால், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரித்துள்ளனர்.