சென்னை :பிளஸ் 2 விடைத்தாள் மையங்களில், பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

தமிழகம் முழுவதும், பிளஸ் 2 பொதுத்தேர்வு, நேற்றுடன் முடிந்தது. ஏற்கனவே திட்டமிட்டபடி, தேர்வுகள் முடிந்து விட்டன. மேலும், வரும், 31ம் தேதி முதல், விடைத்தாள் திருத்த பணிகளை துவங்க, தேர்வுத்துறை திட்டமிட்டிருந்தது. 
ஆனால், 'கொரோனா' பிரச்னையால், 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், இந்த பணிகள், ஏப்ரல், 7க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளன. அதுவரை, பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில், போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தி, கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்துமாறு, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.