இன்று ஊ.ஒ.ந.நிலைப்பள்ளி முதலைப்பட்டி நாமக்கல் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர் 20 பேர் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற துளிர் திறனாய்வு தேர்வில் வெற்றி பெற்றதற்காகவும் ,திருச்சியை மையமாக கொண்டு செயல்படும் நற்றினை அறக்கட்டளையின் வெற்றிபடி நிகழ்ச்சியில் பங்கு கொண்டு பெண்மையின் வீரம் பற்றிய பேசுதல் வீ.விகாஸினிகா,கிருஷ்ணர் பற்றிய பாடல் லி.சமிஸ்தா ஏழாம் வகுப்பு பாரதியார் நாடகத்தின் மூலம் நடிப்பு திறமையை வெளிப்படுத்திய ஏழாம் வகுப்பு மாணவன் ர.மாறன் மாணவி ச.ஹரிப்பிரியா ஆகியோருக்கு நற்றினை அறக்கட்டளை வழங்கிய பாராட்டு சான்றிதழும் பரிசும்  சேலம் விஞ்ஞான சிறகுகள் நடத்திய அறிவியல் சோதனை நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழும்  நாமக்கல் வட்டார கல்வி அலுவலர் உயர்திரு .சுரேஷ் அவர்கள் மாணவ மாணவியருக்கு வழங்கி சிறப்பித்தார்கள்.மேலும் மாணவ மாணவியர் இது போன்று  பல போட்டிகளில் பங்கேற்று தங்கள் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று மாணவ மாணவியருக்கு அறிவுரை வழங்கினார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.