தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களை தனிமைப்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும், 75 மாவட்டங்களை தனிமைப்படுத்த, நேற்று மத்திய அரசு உத்தரவிட்டது. இந்த மாவட்டங்களின் எல்லைகளுக்கு, 'சீல்' வைக்க உத்தரவிட்டதோடு, மக்கள் ஊரடங்கும், வரும், 31 வரை நீடிக்கும் என, தெரிவித்தது. இந்த, 75 மாவட்டங்கள் பட்டியலில், தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம் மற்றும் ஈரோடு மாவட்டங்களும் இடம் பெற்றுள்ளன. மூன்று மாவட்டங்களிலும், ரயில், பஸ் போன்ற பொது போக்குவரத்துக்கு, 31ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டு உள்ளது. மக்கள் ஊரடங்கும் அமலில் இருக்கும். அத்துடன், மூன்று மாவட்டங்களிலும், 31ம் தேதி வரை அத்தியாவசிய சேவைகள் மட்டுமே வழங்கப்படும்.இந்த மூன்று மாவட்ட மக்கள், பிற மாவட்டங்களுக்கு செல்ல முடியாதபடியும், பிற மாவட்ட மக்கள், இந்த மாவட்டங்களுக்கு வர முடியாதபடியும், எல்லைகள், 'சீல்' வைக்கப்படும்.