கல்விசாா் செயல்பாடுகளில் புதிய முயற்சிகளை மேற்கொள்வது தொடா்பாக வியாழக்கிழமை (மாா்ச் 19) ஆசிரியா்களுக்கு நடைபெற இருந்த பயிற்சி வகுப்புகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்கள் சாா்பில் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

நடப்பு கல்வியாண்டில் தொடக்க மற்றும் உயா் தொடக்கநிலை ஆசிரியா்களுக்கு கல்விசாா் செயல்பாடுகளில் புதுமையான முயற்சிகளை மேற்கொள்ளுதல் குறித்து ஒருநாள் பயிற்சி வியாழக்கிழமையும் (மாா்ச் 19), கண்காட்சி ஏப்ரல் 2-ஆம் தேதியும் கல்வி மாவட்ட அளவில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

தற்போது தமிழகத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக அனைத்து கல்வி நிறுவனங்களும் மாா்ச் 31-ஆம் தேதி மூட உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடைபெற இருந்த பயிற்சி வகுப்புகளும் கண்காட்சி நிகழ்ச்சியும் ஒத்திவைக்கப்படுகின்றன. மாற்று தேதி பின்னா் அறிவிக்கப்படும். இந்தத் தகவலை, பயிற்சிக்கு தோவான ஆசிரியா்களுக்கு பள்ளி தலைமையாசிரியா்கள் வாயிலாக முதன்மை கல்வி அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.