சென்னை,:கூட்டுறவு ரேஷன் கடை ஊழியர்களுக்கு, சிறப்பு ஊக்கத்தொகை வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, ரேஷன் கடைகளில், 95 சதவீத கடைகள், கூட்டுறவு சங்கங்கள் கீழ் செயல்படுகின்றன. மீதமுள்ள கடைகள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் கீழ் செயல்படுகின்றன.எனவே, 'ரேஷன் கடைகளில், அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும், 1,000 ரூபாய் ரொக்கத்துடன், அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் போன்றவை, இலவசமாக வழங்கப்படும்' என, முதல்வர் அறிவித்துள்ளார்.இவற்றை வழங்கும் பணி, நாளை முதல் துவங்க உள்ளது. இப்பணியில் ஈடுபடும், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு, 5,000 ரூபாய்; எடையாளர்களுக்கு, 4,000 ரூபாய், சிறப்பு ஊக்கத் தொகை வழங்க, அனுமதிக்க வேண்டும் என, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர், அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.இதை பரிசீலனை செய்த அரசு, விற்பனையாளர்களுக்கு, 2,500 ரூபாய்; எடையாளர்களுக்கு, 2,000 ரூபாய் வழங்க, அனுமதி அளித்துள்ளது.இதன்படி, கூட்டுறவு சங்க ரேஷன் கடைகளில் பணிபுரியும், 21 ஆயிரத்து, 517 விற்பனையாளர்களுக்கு, தலா, 2,500 ரூபாய்; 3,777 எடையாளர்களுக்கு, தலா, 2,000 ரூபாய் வழங்க, 6.13 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
0 Comments
Post a Comment