சென்னை: தமிழ் வழியில் படித்தோருக்கு, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கும் சட்ட மசோதா, சட்டசபையில், இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது. 


தமிழக சட்டசபையில், பட்ஜெட் மீதான மானிய கோரிக்கையில், இன்று உள்ளாட்சி துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறைக்கான மானிய கோரிக்கைகள் மீதான, விவாதம் நடக்க உள்ளது. விவாதத்தின் முடிவில், உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி பதில் அளிப்பார். மேலும், தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை, அரசு பணிகளில், முன்னுரிமை அடிப்படையில், பணி நியமனம் செய்வது தொடர்பான சட்ட திருத்த மசோதாவை, மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகத்துறை அமைச்சர், ஜெயகுமார் அறிமுகம் செய்ய உள்ளார்.