மருந்து, மளிகை கூடுதல் விலையா செயலியில் புகார் செய்யலாம்

திண்டுக்கல் மருந்து, மளிகை, காய்கறி கூடுதல் விலைக்கு விற்றால் அலைபேசி செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம்.கொரோனா முன்னெச்சரிக்கையாக, நாடு முழுவதும் ஏப்.14 வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. பால், காய்கறி, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு தடை இல்லை. பல கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் சில கடைகள் கூடுதல் விலைக்கு விற்பதாக புகார் எழுந்துள்ளது.கூடுதல் விலைக்கு விற்றால், 'TN-LMCTS' எனும் அலைபேசி செயலி மூலம் புகார் தெரிவிக்கலாம். அதில் தங்கள் பெயர், அலைபேசி எண்ணை கொடுத்து உள்ளே செல்லலாம். பிறகு அதில் புகாருக்கான பொருள் (மருந்துகள், சோப், சீனி, பருப்பு), கடையின் புகைப்படம், புகாரை எழுத்து மூலம், ஆடியோ அல்லது வீடியோவாக பதிவு செய்யலாம்.இதே போல் clmchennaitn@gmail.com இமெயில் அல்லது 044-24321438 தொலைபேசி மூலமாக புகார் அளிக்கலாம். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நுகர்வோருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும். என, அதிகாரிகள் தெரிவித்தனர்.