சென்னை:தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., சிறப்பு கல்வி படிப்புக்கு, இந்த மாதம் நடத்தப்படும், அனைத்து நேரடி வகுப்புகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அரசின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, வகுப்புகள் நடத்தும் தேதி அறிவிக்கப்படும் என, பல்கலை நிர்வாகம் அறிவித்துள்ளது.