சென்னை, 'கொரோனா வைரஸ்' பரவலை தடுக்க, ஐ.சி.எஸ்.இ., தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.சி.பி.எஸ்.இ., தேர்வுகளை தொடர்ந்து, ஐ.சி.எஸ்.இ., என்ற, இந்திய இடைநிலை கல்வி சான்றிதழ் வாரியமும், மார்ச் 31 வரை தேர்வுகளை தள்ளிவைத்துள்ளது. விடை திருத்தும் பணிகளும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன; 31க்கு பின், புதிய கால அட்டவணை அறிவிக்கப்படும் என, கூறப்பட்டுள்ளது.