சென்னை : மத்திய ஆசிரியர் தகுதி தேர்வுக்கான விண்ணப்ப பதிவுக்கு, அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின், மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு இயக்குனரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மத்திய ஆசிரியர் தகுதி தேர்வு, ஜூலை, 5ல் நடக்க உள்ளது. இதில், பங்கேற்பவர்களுக்கான ஆன்லைன் பதிவு, ஜன., 24ல் துவங்கியது. மார்ச், 2 வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில், விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், வரும், 9ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது.தேர்வு கட்டணத்தை, மார்ச், 13 வரை செலுத்தலாம். கூடுதல் விபரங்களை, www.ctet.nic.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.