சீனாவில் தொடங்கி இருபத்து நான்கிற்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் நோய் தொற்று பரவாமல் இருப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கும் விழிப்புணர்வினை ஏற்படுத்திட பார்வையில் கண்ட கடிதங்கள் பெறப்பட்டுள்ளது .

இதனைத் தொடர்ந்து இந்நோயின் அறிகுறி , பரவும் விதம் , பாதிப்பு வராமல் இருக்க செய்யவேண்டிய தடுப்பு முறைகள் குறித்து தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . கொரோனா வைரஸ் ( Covid - 19 ) கோவிட் - 19 ( முன்பு 2019 - nCoV ) எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை கொரோனா வைரஸ் ( Coromavirus ) தொற்றுப் பரவல் அனைத்துலக பொதுச் சுகாதார அவசர நிலையாக அறிவிக்கப்பட்டுள்ள தொற்று ஆகும் . சீனாவின் - ஊ . பேய் மாகாணத்தின் தலைநகர் ஊகானில் 2019 ஆம் ஆண்டின் இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டது . இத்தொற்றின் அறிகுறிகள் தோன்றுவதற்கு 2 முதல் 14 நாட்கள் வரை ஆகலாம்...