சீனாவின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் 116 நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகின்றது. இதுவரை
5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், இந்த கொரோனா பாதிப்பால் உயிரிழந்து இருக்கின்றனர். இந்தியாவை பொருத்தவரை 85 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களிலும் திரையரங்குகள் மற்றும் கல்வி நிலையங்கள் என அனைத்தையும் மூடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. கர்நாடக மாநிலத்தில் திருமணம் செய்யவும் தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

வைரஸ் பாதிப்பு காரணமாக திரையரங்குகளை மூட கேரளா, ஜம்மு & காஷ்மிர், தில்லி, ஒடிஷா, கர்நாடகம், பிஹார், மஹாராஷ்டிரம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் உத்தரவிட்டு இருக்கின்றது.

திரையரங்குகளில் கூட்டமாக மக்கள் கூடும் பொழுது கொரோனா தொற்று ஏற்படும் என்ற அச்சத்தால் இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் 8 மாநிலங்களைப் போலவே தமிழ்நாட்டிலும் வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திரையரங்குகளை மூட வேண்டும் என்ற கோரிக்கை தற்போது வலுத்து வருகின்றது. எப்போது இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகள் மக்களிடையே மேலோங்கி இருக்கின்றது.