சென்னை: எட்டாம் வகுப்பு தேர்வுக்கான, வினாத்தாள் வகை வெளியிடப்பட்டுள்ளது.எட்டாம் வகுப்பில், பள்ளிகளில் படிக்காத தனித்தேர்வர்களுக்கு, ஏப்., 2 முதல், 9 வரை, தனியாக தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான விண்ணப்ப பதிவுகள் ஏற்கனவே முடிந்து விட்டன.இந்நிலையில், தேர்வில் எந்த அடிப்படையில் வினாக்கள் இருக்கும் என, அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. அதன் மாதிரியை, www.dge.tn.gov.in என்ற, இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.