சென்னை: 8-ம் வகுப்பு தேர்வு தொடர்பாக அனுப்பப்பட்ட சுற்றறிக்கை தனித்தேர்வர்களுக்கானது என்று அரசு தேர்வுகள் இயக்குநர் விளக்கம் அளித்துள்ளார். 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ரத்தான நிலையில் பொதுத்தேர்வு பெயரில் வந்த சுற்றறிக்கைக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தனி தேர்வர்களுக்கு ஏப்ரல் 2-ம் தேதி முதல் 9-ம் தேதி 8-ம் வகுப்புக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.