கோபி,: ''ஊரடங்கு உத்தரவு விலகியதும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கான அட்டவணை வெளியிடப்படும்,'' என, பள்ளி கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன் கூறினார்.ஈரோடு மாவட்டம் நம்பியூரில், அவர் கூறியதாவது:கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக, வெளி மாநிலங்களுக்கு, வேலைக்கு சென்று திரும்பியவர்களை, வீடுகளிலேயே தனிமைப்படுத்தி, தீவிரமாக அரசு கண்காணிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு, அனைத்து துறை அதிகாரிகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பால் சிறப்பாக நடக்கிறது. கோபி தொகுதியில், 15 ஆயிரம் பேருக்கு, இதுவரை இலவசமாக, முக கவசம் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தடை உத்தரவு விலகியதும், பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிக்கான அட்டவணை வெளியிடப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments
Post a Comment