சென்னை :பிளஸ் 2 பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவடைந்தது. கொரோனா அச்சத்துக்கு மத்தியில், தேர்வுகள் தள்ளிவைக்கப்படாமல் நிறைவு பெற்றுள்ளன.

தமிழக பள்ளி கல்வி பாடத் திட்டத்தில், மார்ச், 2ல், பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்கியது. 
மிகவும் எளிதான மொழிப்பாட வினாத்தாளுடன் துவங்கிய தேர்வால், மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து நடந்த, முக்கிய பாடங்களின் வினாத்தாள்கள் கடினமாக இருந்தன.
இந்நிலையில், நாடு முழுதும் கொரோனா வைரஸ் தொற்று பிரச்னை ஏற்பட்டதும், தேர்வு நடக்குமா; தள்ளி போகுமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டது. 
ஆனால், படிப்படியாக ஒவ்வொரு பாடத்துக்கும் தேர்வு நடத்தப்பட்டு, 
நேற்றுடன் தேர்வு முடிந்தது. வேதியியல், கணக்கு பதிவியல் மற்றும் புவியியல் பாடங்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன. இதையடுத்து, மாணவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். பெற்றோரும் தேர்வு முடிந்ததே என, மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.