சென்னை:பிளஸ் 2 இயற்பியல் தேர்வு, சற்று கடினமாக இருந்தது. காப்பிடியத்த புகாரில், நான்கு பேர் பிடிபட்டனர்.
பிளஸ் 2 மாணவர்களுக்கு, நேற்று இயற்பியல், பொருளியல் மற்றும் கணினி தொழில் நுட்ப தேர்வுகள் நடந்தன. இதில், காப்பியடித்த புகாரில், நான்கு பேர் பிடிபட்டனர்.நேற்றைய தேர்வில், இயற்பியல் வினாத்தாள் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர். 'சராசரி மாணவர்கள் தேர்ச்சி பெறுவதில் பிரச்னை இருக்காது; ஆனால், சென்டம் மதிப்பெண்ணை பெற முடியாத வகையில், இயற்பியல் மற்றும் பொருளியல் வினாத்தாள் கடினமாக அமைந்திருந்தது' என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.