சிவகங்கை, தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் 2 விடைத்தாள் திருத்தும் பணியை ஏப்ரல் 7ம் தேதிக்கு கல்வித்துறை ஒத்திவைத்துள்ளது.கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பள்ளி, கல்லுாரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்தது. பிளஸ் 2 தேர்வு நேற்றுடன் முடிந்தது. பிளஸ் 1 தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பிளஸ் 2 விடைத்தாள்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் வைக்கப்பட்டுள்ளன.தமிழக அளவில் 112 விடைத்தாள் திருத்தும் மையங்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தன. மார்ச் 31 முதல் திருத்தும் பணி துவங்க இருந்தது. கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 7 முதல் துவங்கும் என கல்வித்துறை அறிவித்துள்ளது.