சென்னை: பிளஸ் 2 தேர்வு, நேற்று துவங்கியது. 'காப்பி' அடித்த, 11 தனி தேர்வர்கள் பிடிபட்டனர். சென்னையில் மட்டும், ஏழு பேர் சிக்கினர்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 3,012 மையங்களில், 8.35 லட்சம் பேர், பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர். நேற்று, தமிழ் மற்றும் பிற மொழி பாடங்களுக்கான தேர்வுகள் நடந்தன. ஆய்வுதேர்வில் முறைகேடுகள் நடக்காமல் தடுக்க, 4,000 பறக்கும் படைகளை சேர்ந்த, 20 ஆயிரம் ஆசிரியர்கள், தேர்வு மையங்களில் ஆய்வு நடத்தினர். 

மேலும், பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், தொடக்க கல்வி இயக்குனர் பழனிசாமி, முறைசாரா கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், இணை இயக்குனர்கள் நாகராஜ முருகன், ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகளும், தேர்வு மையங்களில், திடீர் ஆய்வு நடத்தினர். முறைகேடு புகார்கள் எதுவும் வரவில்லை. மாணவ - மாணவியர், 'காப்பி' அடித்ததாக பிடிபடவில்லை. ஆனால், சென்னையில், ஏழு தனி தேர்வர்களும், வேலுாரில், நான்கு தனி தேர்வர்களும், காப்பி அடித்து பிடிபட்டனர். 

இந்நிலையில், தமிழ் மொழி தேர்வு கேள்விகள், மிக எளிதாக இருந்ததாக, மாணவ -- மாணவியர் தெரிவித்தனர். மாணவ, மாணவியர் கூறியதாவது:புதிய பாடத்திட்டத்தின், முதல் பொது தேர்வு என்பதால், வினாத்தாள் எப்படி இருக்குமோ என, பயந்தோம். ஆனால், முதல் தேர்வே மிகவும் மகிழ்ச்சியாக அமைந்துள்ளது. ஓரளவு பாடங்களை படித்திருந்தாலே, 80 மதிப்பெண்களுக்கு மேல் பெறலாம். நடிகர் திலகம்வினாக்களின் அமைப்பும் புரியும் வகையில் இருந்தது. நிறைய கேள்விகள், பாடங்களில் இருந்தே கேட்கப்பட்டன.

ஒரே தாளாக மொழி தேர்வு குறைக்கப்பட்டாலும், அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் இடம்பெற்றன. இவ்வாறு, அவர்கள் கூறினர். நேற்றைய தமிழ் மொழி தேர்வில், கேள்வி எண், 46ல், 'சாலை விபத்தில்லாத தமிழ்நாடு, இக்கூற்றை நனவாக்க, நாம் செய்ய வேண்டியவை எவை; நடிகர் திலகம் என்ற பட்டம், சிவாஜிக்கு பொருத்தமானதே என்பதை நிறுவுக' என்ற, கேள்விகள் இடம் பெற்றிருந்தன.