சென்னை:வரும், 5ம் தேதி நடத்தப்பட இருந்த, 'குரூப் - 1' தேர்வு தள்ளி வைக்கப்பட்டு உள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு:தமிழக அரசு துறைகளில் காலியாக உள்ள, துணை கலெக்டர், டி.எஸ்.பி., உள்ளிட்ட பல்வேறு, 'குரூப் - 1' பதவிகளுக்கு, வரும், 5ம் தேதி தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக, பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேர்வர்கள், தேர்வு மையங்களுக்கு வர சிரமம் ஏற்படும். எனவே, குரூப் - 1 தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது; மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.