புதுடில்லி: சீனாவை உலுக்கிய கொரோனா வைரஸ், இந்தியாவிலும் பரவ துவங்கி ஒருவர் பலியாகியுள்ளார். இந்தியாவில், 17 வெளிநாட்டினர் உட்பட, 73 பேர் 'கொரோனா வைரஸ்' பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். 'இந்த வைரசை ஒழிக்கும் மருந்தை கண்டுபிடிக்க, ஒன்றரை ஆண்டுகள் ஆகும்' என, இந்திய மருத்துவ ஆய்வு கழகத்தின், தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.