1. அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் தவிர, மற்ற பொது போக்குவரத்து, தனியார் போக்குவரத்து, கார், ஆட்டோ , டாக்சி ஆகியன இயங்காது.

2 பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர, அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காது.

3 அத்தியாவசிய துறைகள் மற்றும் அலுவலகப் பணிகள் தவிர மற்ற அரசு அலுவலகங்கள் செயல்படாது.

4. தனியார் நிறுவனங்கள், ஐடி பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய வேண்டும். மருத்துவம் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ளும் தனியார் நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்கும்

5.அத்தியாவசியமான பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலைகள், ஏற்றுமதி நிறுவனங்கள் குறைந்த பணியாளர்களுடன் இயங்க அனுமதி

6. அத்தியாவசிய கட்டட பணிகள் தவிர பிற கட்டடப் பணிகளுக்கு தடை

7. வீடுகளில் இல்லாமல், விடுதிகள் மற்றும் பிற இடங்களில் தங்கி இருக்கும் பணியாளர்களின் நலன் கருதி பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்கும் வகையில் உணவகங்கள் திறந்திருக்க அனுமதி.

8. அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.