சென்னை: தமிழகத்தில் 11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைப்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருகிறது. 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளையும், 26-ம் தேதியும் தேர்வுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. கொரோனா எதிரொலியால் பொதுத்தேர்வுகளை ஒத்திவைக்க கோரிக்கை எழுந்த நிலையில் ஆலோசனை நடைபெறுகிறது.