10-ம் வகுப்பு மெட்ரிக் தேர்வு,'பிட்' கும்பல்

மும்பை: மஹாராஷ்டிராவில் 10-ம் வகுப்பு மெட்ரிக் தேர்வு மைய அறையின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறிய சிலர் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ‛பிட்' களை அளித்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் 10-ம் வகுப்பு மெட்ரிக் தேர்வுகள் துவங்கின. மாநிலம் முழுவதும் மாணவ- மாணவியர் எழுதினர். யவாத்மால் மாவட்டம் மஹாகோன் என்ற நகரில் தேர்வு மையத்தில் மாணவர்கள் தேர்வு எழுதி கொண்டிருந்தனர். அப்போது தேர்வு மையத்தின் காம்பவுண்ட் சுவர் மீது ஏறி சிலர் மாணவர்களுக்கு ‛பிட்' களை வீசி எறிந்த வண்ணம் இருந்தனர். இதன் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
தகவலறிந்த தேர்வு கட்டுப்பாட்டு அலுவலவர் கூறுகையில், உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்து. உரிய பாதுகாப்பு தருமாறு வலியுறுத்தியுள்ளோம் என்றார்.