நாமக்கல் கல்வி மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான " NISHTHA TRAINING ' பயிற்சி வகுப்பின் போது ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் நடனம் ஆடுவது சமுக வலைதளங்களில் காணொளி காட்சியாக பரவியதாக புகார் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

1 ) " NISHTHA TRAINING " பயிற்சியின் போது நடனம் ஆடிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகள் எவரேனும் இருப்பின் அவர்கள் பற்றிய விவரங்கள்.

2 ) செப்டம்பர் 2019 மாதம் முதல் ஜனவரி 2020 மாதம் வரை தொடர்சியாக , ஒவ்வொரு மாதமும் 3 நாட்களுக்கு மேல் விடுப்பு எடுத்துள்ள ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியைகளின் விவரங்கள் .

மேற்காணும் விவரங்களை இன்று 10 . 02 . 2020 பிற்பகல் 05 . 00 மணிக்குள் இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறும் , விவரங்கள் இல்லை எனில் இன்மை அறிக்கையை சமர்ப்பிக்குமாறும் நாமக்கல் வட்டாரம் - 1 மற்றும் நாமக்கல் வட்டாரம் - 2 ஐ சார்ந்த அனைத்து வகைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.